திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 07/02/2022 அன்று மாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் எட்டாம் நாளான வரும் 13/02/2022 அன்று காலை சண்முகர் உருகுச்சட்ட சேவையும், தொடர்ந்து வெற்றிவேர் சப்பரத்தில் சண்முகர் புறப்பாடும், பகலில் சிவப்பு சாத்தி மண்டகப்படியில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 5.00 மணிக்கு மேல் தங்கச்சப்பரத்தில் சண்முகர் பெருமான் சிவப்பு சாத்தி திருக்கோலத்தில், பின்புறம் நடராஜர் திருக்கோலம் காட்டியபடி புறப்பாடாகி எட்டு ரத வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சண்முகர் பெருமான் திருக்கோவிலில் இருந்து எழுந்தருளி வீதி உலா வருவார் என்பது சிறப்பம்சம்.