- திருச்செந்தூரில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம்.
- முருகப்பெருமானே உருவாக்கியதாக ஐதீகம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தீர்த்தத்தை முருகப்பெருமானே தனது வேலால் பூமியில் குத்தி உருவாக்கியதாக கூறப்படுகிறது.
சூரசம்ஹாரம் முடிந்த வெற்றிக்களிப்பில் தனது படை வீரர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு, முருகப்பெருமான் உருவாக்கிய இந்த தீர்த்தம் இன்றும் கடற்கரையில் குடிப்பதற்கு உகந்த நல்ல நீராக சுரந்து கொண்டிருப்பது சிறப்பம்சம் ஆகும். இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடி பின்னர் நாழிக்கிணற்றில் நீராடிவிட்டு தான் இந்த கோவிலில் உறையும் முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
Image source: Facebook.com