திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் பதினோராம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கர் மற்றும் தெய்வானை அம்மை பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து வெளி தெப்பக்குள மண்டகப்படியில் சென்று சேர, சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் குமரவிடங்கர் மற்றும் தெய்வானை அம்மை எழுந்தருள தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது . இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.