திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான நேற்று (16/02/2022) இரவில் சுவாமி குமரவிடங்கர் - தங்க கைலாச பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மை - வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் செய்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இன்று காலை திருச்செந்தூரில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.