திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவின் எட்டாம் திருநாளான நேற்று பகலில் சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில், வைர கிரீடம், வைர வேல் தாங்கி, பச்சை சாத்தி திருக்கோலத்தில், விஷ்ணு அம்சத்தில் எழுந்தருளி மாட வீதிகள் மற்றும் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற்று பச்சை மாலை, பச்சை பட்டு ஆகியவற்றை சண்முகருக்கு சாத்தி வழிபட்டனர். பின்னர் இரவில் வீதியுலா முடிந்து திருக்கோவில் திரும்பிய சண்முகருக்கு, சண்முக விலாச மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.