தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழை காரணமாக மாநகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் நேற்று தூத்துக்குடியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரையண்ட் நகர் பகுதியில் சாலையில் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட அவர், மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படியில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.