- தேசிய அளவிலான குடோ போட்டியில் பதக்கங்கள் வென்று தூத்துக்குடி மாணவர்கள் சாதனை.
- காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த 14.2.2022 முதல் 20.2.2022 ஆம் தேதி வரை இமாச்சலபிரதேச மாநிலம் சோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவர்கள் எமில் சாலமோன், அஜித்குமார் ஆகியோர் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 5 மாணவர்கள் அடுத்து நடைபெற உள்ள சர்வதேச அளவிலான அக்சய்குமார் டிராபி போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்று உள்ளனர்.
இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .ஜெயக்குமார் அவர்கள் அந்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குடோ சங்க தலைவர் இசக்கிராஜா, செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com