தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான திரு.செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் எந்தவொரு கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மத பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடாது, மற்ற அரசியல் கட்சிகள் மீதான விமர்சனம், அவர்களின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் இருக்க கூடாது, வாக்குகளை பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது, வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக் கூடாது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை மிரட்டுவது, வாக்காளர்களை ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பிரசாரம் செய்வது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட பிற தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.