செய்திக் குறிப்புகள்
- திருநெல்வேலி மாவட்டம் 11 பேருக்கு இந்த ஆண்டு கௌரவ கர்னல் கமாண்டன்ட் பதவி
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பிச்சுமணி பதவியற்பு
திருநெல்வேலி பேட்டை
கௌரவ கர்னல் கமாண்டன்ட் பதவி இந்த ஆண்டும் இந்திய பாதுகாப்பு அமைச்சரகத்தால் நடத்தப்பட்டது. தேசிய மாணவர் படைத்திட்டத்தில் கௌரவ கர்னல் கமாண்டன்ட் பதவி 11 பேருக்கு என அறிவிக்கப்பட்டது.
இந்த பதவி பெற்ற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பிச்சைமணி பதவியேற்கும் விழா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்தது.
துணை வேந்தர் கே.பிச்சுமணி வேதியியல் பேராசிரியராக பணியாற்றிவர். இவருக்கு ஆசிரியர் பணியில் 37 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. பல சாதனைகளை பெற்றவர் இப்பொழுது தேசிய மாணவர் படைத்திட்டத்தில் கௌரவ கர்னல் கமாண்டன்ட் பதவியும் பெறுகிறார் என்பது பெருமைக்குரிய செய்தி.
விழாவில் தமிழக தேசிய மாணவர் படைக்கட்டளை அதிகாரி கர்னல் பாபி ஜோசப், லெப்டினன்ட் கர்ணன் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்று துணைவேந்தர் பிச்சுமணிக்கு கௌரவ கர்னல் கமெண்டட்டாக பதவி பிரமாணம் செய்து வைத்து , அதற்குரிய அதிகாரப்பூர்வ கடிதத்தையும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாட்டினை பல்கலைக்கழகம் தேசிய மாணவர் படை அதிகாரி சிவக்குமார் செய்திருந்தார். பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை ஆட்சி மன்றம் குழு உறுப்பினர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள் , கல்லூரி முதல்வர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Image source: Dailythanthi