தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சாலையில் வெள்ள நீர் பெருக்குடுத்து ஓடுவதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் இன்றும் நாளையும் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.