திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவின் பதினோராம் திருநாளான நேற்று சௌந்தர சபையில் சபாபதி எழுந்தருளி, காந்திமதி அம்மைக்கு திருநடன காட்சியளிக்கும் வைபவம் இனிதாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து சந்திப்பிள்ளையார் கோவிலுக்கு முன்னர் வெள்ளி இடப வாகனத்தில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளி, காந்திமதி அம்மைக்கு காட்சியளிக்க மாலை மாற்றுதல் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கினார்கள்.