தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் வரும் 08/02/2022 அன்று திருமாலை பூஜை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று காலை 8.00 மணிக்கு மேல் பால் குடம் எடுக்கும் வைபவமும், பகல் 1.00 மணிக்கு மேல் அபிஷேகங்களுடன் கூடிய சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. பின்னர் மாலை 6.00 மணிக்கு மேல் தெரு மறித்து பொங்கல் வைக்கும் வைபவமும், இரவு 9.00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருதலும், தொடர்ந்து மறுநாள் காலை படையல் தீபாராதனையும் நடைபெற உள்ளது.