வைணவ திவ்ய தேச கோவில்கள் நூற்றியெட்டினுள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலும் ஒன்று ஆகும். இந்த கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் தெப்ப திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாம் நாளான நேற்று மாலையில் அழகிய நம்பிராய பெருமாள், தாயார்களுடன் தெப்பத்திற்கு எழுந்தருள சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள், தெப்பக்குளத்தை பன்னிரெண்டு முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்கினார். இரண்டாம் திருநாளான இன்று மலை மேல் நம்பி பெருமாள் தெப்பத்தில் எழுந்தருள, தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர் மடத்தை சார்ந்த நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.