- திருக்குறுங்குடி நம்பி கோவில் பங்குனி திருவிழா.
- ஐந்து கருட சேவை விமரிசையாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம்., திருக்குறுங்குடியில் உள்ளது வைணவ திவ்ய தேச ஸ்தலங்களுள் ஒன்றான அழகிய நம்பிராயர் திருக்கோவில். ஐந்து வடிவங்களில் மஹா விஷ்ணு காட்சித்தரும் இந்த கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 18/03/2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஐந்தாம் திருநாளான 22/03/2022 நேற்று முன்தினம் இரவில் பிரசித்தி பெற்ற ஐந்து கருட சேவை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய ஐந்து பெருமாள்களும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி உலா வந்து, மேல ரத வீதியில் மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி திரும்பி அங்கு வாழும் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் காட்சியளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐந்து பெருமாள்களையும் ஓரே நேரத்தில் சேவித்தனர்.
Image source: dailythanthi.com