- திருக்குறுங்குடி பங்குனி திருவிழா தீர்த்தவாரி.
- நம்பியாற்றுக்கு தாயார்களுடன் பெருமாள் எழுந்தருளினார்.
108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவிலில் நடைபெற்று வந்த பங்குனி திருவிழாவின் கடைசி நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று காலை உற்சவர் அழகிய நம்பிராயர் பெருமாள், தாயாய்களுடன் புறப்பட்டு நம்பியாற்றங்கரைக்கு எழுந்தருளினார். அங்கு வைத்து பெருமாளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு திருமஞ்சனத்துடன் கூடிய தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பியாற்றில் நீராடி பெருமாளை சேவித்தனர்.
Image source: Facebook.com