- திருக்குறுங்குடி நம்பி கோவில் பங்குனி திருவிழா.
- பத்தாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அமையப்பெற்றுள்ளது அழகிய நம்பிராயர் திருக்கோவில். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இங்கு பெருமாள் நம்பி நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 வடிவங்களில் காட்சித்தருகிறார்.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18/03/2022 தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அழகியநம்பிராயர் பெருமாள் தினமும் காலையும், இரவிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து பத்தாம் திருநாளான நேற்று பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது
இதையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் அழகியநம்பிராயர் பெருமாள் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் தேரோட்டத்தை தொடங்கி வைக்க, நான்கு ரத வீதிகளிலும் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.
Image source: dailythanthi.com