திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று சண்முகர் தங்கச்சப்பரத்தில், சிவப்பு சாத்தி திருக்கோலத்தில், வைர கிரீடம், வைர வேல் தாங்கி, பின்பக்கம் நடனக்கோலம் காட்டியபடி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா என்ற கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து எட்டாம் திருநாளான இன்று அதிகாலை சண்முகர் வெள்ளை சாத்தியும், பகலில் சண்முகர் பச்சை சாத்தியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.