தூத்துக்குடி மாநகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக எதிரே உள்ள மைதானத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது சில நாட்களாக மாநகரில் பரவலாக மழை பெய்து வருவதால் மழை நீர் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து தெப்பக்குளம் போல காட்சியளிக்கிறது. தேங்கியுள்ள மழை நீரோடு கழிவு நீரும் கலந்து வருவதால் பேருந்து நிலையம் முழுவதும் சுகாதார கேடு நிலவி வரும் நிலையில், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை விரைவில் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.