தென்காசி மாவட்டம்., சங்கரன்கோவிலில் உள்ளது பிரசித்திபெற்ற கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்கசுவாமி கோவில். தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதத்தில் ஊருக்குள் உள்ள ஆவுடை தெப்பத்தில் தெப்பத்திருவிழா நடைபெற வேண்டும். பல ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாமல் தெப்பத்திருவிழா தடைபட்ட நிலையில், சென்ற வருடம் பக்தர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் பேரில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தெப்பத்திருவிழாவுக்கான நாள் நெருங்கி வரும் வேளையில், ஆவுடை தெப்பத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் போதிய பராமரிப்பின்றி மாசடைந்து காணப்படுகிறது.
தெப்பக்குளத்துக்குள் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தெப்பக்குளத்தை சுற்றிலும் சுவர் எழுப்பியும், குப்பைகளை அகற்றியும் முறையாக பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், பக்தர்களும் விரும்புகின்றனர்.