திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ள காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவின் பன்னிரெண்டாம் திருநாளான நாளை (20/01/2022) இரவு சுவாமி சன்னதி வீதியில் உள்ள சந்திர புஷ்கரணி (வெளித்தெப்பம்) தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நாளை பகல் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி நெல்லையப்பர் , காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தெப்பக்குளக்கரை மீனாட்சி - சொக்கநாதர் கோவில் மண்டகப்படியில் எழுந்தருள சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. பின்னர் மாலை சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய தீபாராதனையும், அதனை தொடர்ந்து இரவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.