தெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி காண்போம்
வழிவழியாக நம்முடைய முன்னோர் காலத்தில் இருந்தே குலதெய்வத்தை வழிபடுவது என்பதை வழக்கமான சம்பிரதாயமாக வைத்திருக்கின்றோம்.
நாம் முறையாக வருடாவருடம் குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வேண்டி வழிபட்டால் ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் நம்மை காப்பாற்றும் .
ஒரு மனிதனுக்கு ஏழு பிறப்பு உண்டு என்பதை அறிந்து இருப்போம். பிறக்கும் சன்னதிக்கும் அதே ஏழு பிறப்பு உண்டு. 7 சந்ததிகள் கொண்டது ஒரு வம்சம் இந்த வம்சம் நலமாக வளமாக வாழ்ந்து முடிவடைய வேண்டும் என்பதற்கான வேண்டுதலே குலதெய்வ வழிபாடு.
முன்னோர்கள் வழி வழியாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை நாம் வணங்குவதால் , நம் முன்னோர்களின்ஆசியை மட்டுமின்றி, குலதெய்வத்தின் அருளையும் நாம் பெறுகிறோம்.
தெய்வ வழிபாடு எ ன்பது..நம்முடையகஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டுவது தெய்வ வழிபாடு .
நம்முடைய வினைப்பயன்கள் அனைத்தும் விலக வேண்டும் என்பது தெய்வ வழிபாடு .
நமக்கு செல்வங்கள் அனைத்தும் பெற்று வாழ்க்கையில் சிறப்போடு வாழ வேண்டும் என்பது தெய்வ வழிபாடு.
குல தெய்வ வழிபாடு என்பது…
தெய்வத்தின்அருளால் கிடைத்த இவை அனைத்தும் நிலைக்க வேண்டும் வாழ்க்கையில் சிறப்பு அடைய வேண்டும் என நினைத்து வேண்டுவது குலதெய்வ வழிபாடு. குலதெய்வத்தை வேண்டும்போது நம்முடைய முன்னோர்கள் ஆசியும் நமக்கு கிடைக்கிறது.
ஒரு ஆலமரம் போன்று வாழ்க்கை தழைத்து வளர வேண்டுமெனில், ஆணி வேராக அமைவது குலதெய்வ வழிபாடு.
ஒரு அழகிய நந்தவனம் போன்று குளிர்ச்சியாக, வாழ்க்கை அமைவதற்கு அடித்தளமாய் அமைவதும் குலதெய்வ வழிபாடு.
திருமணம் கனிவதற்கும் திகட்டாத வாழ்வு பெறுவதற்கும் , சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் வாழ்வினில் இனிமை பெற்று, செல்வங்கள் பல பெற்று மனமொத்த தம்பதியராக மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்வதற்கும் வருடாவருடம் பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமாக செய்ய வேண்டும்.