செய்தி சுருக்கம் :
- பாளையங்கோட்டை கேடிசி நகரங்களின் தூய்மைகான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
- சென்னை மாநகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர்
மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சிந்தையும் செயலும் ஒன்றாகி சுற்றுப்புறம் தூய்மையாகி ,செய்யும் முயற்சி சிறப்பாகி சென்னை மாநகராட்சி தூய்மை பெற்ற நகரமாய் திகழவேண்டும் என்று அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதையொட்டி திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பாளையங்கோட்டை மண்டலம் கேடிசி நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கத் தொடக்க விழா மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எம்எல்ஏ மு. அப்துல் வஹாப் தலைமை வகிக்க மேயர் பி எம் சரவணன் துணை மேயர் கே. ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலை வகிக்க தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சில், நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் நடராஜன், மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிய குடியிருப்பு மக்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .
குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நீர் நிலைகளை சுத்தமாக பராமரிக்கும் முறைகள் பற்றி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று மாநகர பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தூய்மைப் பணி குறித்த உறுதிமொழிகள் எடுக்கப்பபட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி விழா நிறைவடைந்தது.