திருநெல்வேலி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று தைச் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. மாநகரில் உள்ள பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில், முப்பிடாதி அம்மன் கோவில், உச்சினிமாகாளி அம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், வண்டிமலைச்சி அம்மன் கோவில், தூத்துவாரி அம்மன் கோவில், உலகம்மன் கோவில், வண்ணாரப்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோவில், தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று பகலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரத்துடன் கூடிய படையல் தீபாராதனையும், மாலையில் சிறப்பு பூஜையும் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் கலந்து கொள்ளலாம்.