திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வாகைக்குளம் வாகைப்பதி அய்யா வைகுண்டர் திருக்கோவிலில் தை திருவிழா கடந்த 28/01/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை திரளான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. பின்னர் இரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வந்து காட்சிதர, கொடி இறக்கம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான அன்புக்கொடி மக்களும், வாகைபதி வாழ் தொண்டர்களும், பல்வேறு ஊர்களில் இருக்கும் அய்யா வழி பக்தர்களும் கலந்து கொண்டனர்.