- தென்காசி நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
- ஆளுங்கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் கடந்த அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க 11 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ஜ 5 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளது.
தென்காசி நகராட்சியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:
வார்டு 1- வசந்தி (ம.தி.மு.க.), வார்டு 2 -உமா மகேஸ்வரன் (அ.தி.மு.க.), வார்டு 3- கல்பனா (சுயே.), வார்டு 4 - ராமசுமதி (அ.தி.மு.க.), வார்டு 5 - கார்த்திகா (தி.மு.க.), வார்டு 6 - சுமதி (தி.மு.க.), வார்டு 7 - முப்புடாதி (தி.மு.க.), வார்டு 8 - பொன்னம்மாள் (பா.ஜ), வார்டு 9 - நாகூர் மீரான் (சுயே.), வார்டு 10 - முகமது மைதீன் (சுயே.), வார்டு 11 - சுல்தான் சரிப் (சுயே.), வார்டு 12 - பூமாதேவி (காங்கிரஸ்), வார்டு 13 - ரெஜினா (தி.மு.க.), வார்டு 14 - சீதாலட்சுமி (பா.ஜ), வார்டு 15 - சங்கரசுப்பிரமணியன் (பா.ஜ), வார்டு 16 - ஜெயலட்சுமி (தி.மு.க.), வார்டு 17 - ஆஷிக் முபீனா (தி.மு.க.), வார்டு 18 - சாதிர் (தி.மு.க.), வார்டு 19 - பானு (தி.மு.க.), வார்டு 20 - செய்யது சுலைமான் என்ற ரபிக் (காங்கிரஸ்), வார்டு 21 - அபுபக்கர் (சுயே.), வார்டு 22 - ராமசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), வார்டு 23 - சுனிதா (பா.ஜ), வார்டு 24 - மகேஸ்வரி (தி.மு.க.), வார்டு 25 - மஞ்சுளா (காங்கிரஸ்), வார்டு 26 - முத்துகிருஷ்ணன் (சுயே.), வார்டு 27 - காதர்மைதீன் (காங்கிரஸ்), வார்டு 28 - குருசாமி (அ.தி.மு.க.), வார்டு 29 - கே.என்.எல்.எஸ்.சுப்பையா (தி.மு.க.), வார்டு 30 - லட்சுமணபெருமாள் (பா.ஜ), வார்டு 31 - முருகன் (தி.மு.க.), வார்டு 32 - சுப்பிரமணியன் (காங்கிரஸ்), வார்டு 33 - ராமகிருஷ்ணன் (சுயே.)
Image source: Facebook.com