- வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி.
- திருநெல்வேலி மாநகர பகுதியில் டீ, காபி விலை உயர்வு.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி வருகின்றனர். திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் நேற்று முதல் டீ, காபி விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீ, நேற்று முதல் 12 ரூபாய்க்கும், 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காபி, நேற்று முதல் 13 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பார்சல் டீ மற்றும் காபி 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து டீக்கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image source: dailythanthi.com