தமிழகத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்., பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் இ வணிக நிறுவனங்கள் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் பொது மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தினசரி விற்பனைக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்துள்ள பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்த அல்லது அடுத்த மாவட்டத்திற்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெற அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்கள் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கீழ்கண்ட தொடர்பு எண்களை பயன்படுத்தி தங்கள் பொருட்களை சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம்:
வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்: 9842788906.
தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்: 9443791079.
தூத்துக்குடி மாவட்டம்:
வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்: 9487523498.
தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்: 9443507232.
தென்காசி மாவட்டம்:
வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்: 7010254484.
தோட்டக்கலைத்துறை இணை / துணை இயக்குனர்: 9442394450.