- அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழா.
- சிறப்பு விருந்தினருக்குஉலக திருக்குறள் நாயகர் விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் நெல்லை பொதிகை தமிழ் சங்கம் இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள திறந்தநிலை கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு பொதிகை தமிழ்ச் சங்கம் சார்பில் ‘உலக திருக்குறள் நாயகர்’ விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சுந்தர், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், திருக்குறள் தகவல் மையத்தின் தலைவர் ராமசாமி, திருக்குறள் முருகன் மற்றும் மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Image source: maalaimalar.com