- மாவட்ட அருங்காட்சியகத்தில் நாளை நடைபெற உள்ள தமிழ் இலக்கிய போட்டிகள்.
- வெற்றி பெறும் மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் திறந்தநிலை கலையரங்கத்தில் வைத்து நாளை (30/03/2022) மாலை பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான தமிழ் இலக்கிய போட்டிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காப்பாட்சியர் திருமதி.சிவசத்தியவள்ளி அவர்கள் கூறுகையில், மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகை தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் திருக்குறள் படம் பிடித்து காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், கோலப் போட்டியும், உலகப்பொதுமறை நூல் திருக்குறளை என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளதாகவும், இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Image source: Facebook.com