கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமைப்பதியில் கடந்த 14/01/2022 ஆம் தேதி தை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவின் 11-ம் நாளான நேற்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டருக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து உகப்படிப்பும் நடந்தது. பின்னர் பகல் 11.00 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருள, பகல் 12.00 மணிக்கு மேல் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான அன்புக்கொடி மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார்கள்.