செய்தி குறிப்புகள்:
- கோபால சமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- கிராம உதயம் அமைப்பு இயக்குனர் வே சுந்தரேசன் பிரச்சாரத்தை தலைமை தாங்கி நிகழ்த்தி வைத்தார்.
கோபாலபுரத்தில் கிராம உதயம் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
பிளாஸ்டிக் தயாரிப்பதால் வெளிப்படும் ரசாயன கழிவுகள் நீர், காற்று தனில் கலந்து சுற்றுப்புற சூழல் பாதிப்பு மட்டுமன்றி உயிர்களும் பாதிப்புக்கு உள்ளாவது அனைவரும் அறிந்ததே.
மண்ணின் வளத்தை சிதைக்கும் மக்காத குப்பையாக இருக்கும் பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் 500 பெண்களுக்கு மஞ்சள் பை வழங்குதல் மரக்கன்றுகள் வழங்குதல் என மிக அழகிய நிகழ்வுகள் இதில் நடைபெற்றது.
கருத்தரங்கில் இயக்குனர் வே சுந்தரேசன் பங்கேற்று தலைமை தாங்கி விழாவை நிகழ்த்தி வைத்தார். விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தன்னார்வ தொண்டர்கள், பகுதி பொறுப்பாளர்கள் , மகளிர் குழுக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இனிதே விழிப்புணர்வு பிரச்சாரம் நிறைவடைந்தது.