விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலில் லேசான சாரல் மழையாக துவங்கி சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது. வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வயல்களில் கோடை கால நெல் நடவு பணிகளுக்காக நாற்று பாவி உள்ள நிலையில், தற்போது பெய்துள்ள மழை விவசாய பணிகளுக்கு கைகொடுக்கும் என்பதால் விவசாயிகள் சுறுசுறுப்பாக தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.