விருதுநகர் மாவட்டம்., வத்திராயிருப்பு அருகே அமையப்பெற்றுள்ளது சதுரகிரி சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் திருக்கோவில். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதியில் அமையப்பெற்றிருக்கும் இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜையில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று தை மாத பௌர்ணமியை ஒட்டி சந்தனமகாலிங்க சுவாமிக்கும், சுந்தரமகாலிங்க சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை - வனத்துறை சோதனை சாவடி தாண்டி செல்லவே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்து சதுரகிரிக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சோதனை சாவடி அருகிலேயே முடி காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு மேற்கொண்டார்கள்.