செய்திக்குறிப்புகள்:
- ஓம் நமச்சிவாய ' எனும் மந்திரத்தின் ஒலி உணர்கையில்.. மனம் பண்பட்டு படிப்படியாக உயர்நிலை நாம் பெற்று பிறவா நிலை பெற்று- என்றென்றும் தெய்வத்தோடு கலந்த உன்னத நிலை பெறுவதற்கு கோவில் விசேஷங்கள் தரிசனம் காண வேண்டுவது கோடி கோடி புண்ணியம்.
- அப்படிப்பட்ட புண்ணியத்தை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பினில் காணப் போகின்றோம்.
ஒரு முறை ஸ்வேதகேது மகாராஜா தனது மனைவியோடு தீர்த்த யாத்திரையாக பல ஸ்தலங்களுக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக மனைவி இறந்து விடுகிறார். மனதில் கவலையோடு அவர் ஒவ்வொரு ஸ்தலமாக சென்று சிவபெருமானை வேண்டி கடைசியாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் ஸ்தலத்திற்கு வருகிறார்.
அவருடைய விதி முடிந்து விட்டதால் எமதருமன் ஸ்வேதகேது மன்னனை நெருங்குகிறான் . எமதர்மன் வருவதை கண்டு காலசம்ஹாரமூர்த்தியாய் காட்சி தரும் நெல்லையப்பர் இடத்திலே தஞ்சம் அடைந்து தனக்கு உயிர் பிச்சை வேண்டி சரணாகதி அடைகிறான் மன்னன்.
சுவாமி அவருக்கு மனமிரங்கி மரண பயம் போக்கி அருள் செய்த திருவிளையாடல் நடைபெற்ற தினம் இதுவாகும்
இதையொட்டி நேற்று காலையில் நெல்லையப்பர் கோவிலில் நிறைய பக்தர்கள் வந்திருந்து தரிசனம் காண சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இரவில் சுவாமி அம்பாள், விநாயகர் முருகன் அலங்கார தீபாராதனை, நடந்தது . இரவில் சுவாமி அம்பாள் விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளும் செப்பு தேரில் வீதி உலா வர அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Image source: getlokalapp.com