செய்திக்குறிப்புகள்:
- நெல்லையப்பர் கோவிலில் 500 பேருக்கு அன்னதானத் திட்டம் சபாநாயகர் தொடங்கி வைப்பு.
- நெல்லை 20 கோவில்களில் நடைபெறும் இந்தத் திட்டத்தில் 1100 பேர் பயனடைவர்.
நெல்லை மாவட்டம் அன்னதானத் ஏற்பதிட்டம் மொத்தம் 20 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதனால் 1100 பேர் தினமும் பயனடைந்து வருகிறார்கள் .
நெல்லையப்பர் கோவிலிலும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அன்னதான திட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நெல்லையப்பரஈஈஈகாந்திமதி அம்மன் கோவிலில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது .
இப்பொழுது நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனி தேர் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் 500 பேருக்கு என தீர்மானித்து அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது.
பக்தர்களுக்கு உணவு வழங்கி சபாநாயகர் அப்பாவு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாலை ராஜா, லக்ஷ்மணன், இந்து சமய அற நிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, ஆய்வாளர் தனலட்சுமி கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் திமுக மாநகராட்சி கோவில் ஊழியர்கள் ஆளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம் வழங்குவது கோவிலில் சிறப்பு என்றாலும், நம்முடைய வாழ்க்கையில் அன்னதானத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திருநெல்வேலி டுடே இங்கு முன்மொழிகின்றது..
தானம் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டால் உடனே நிறைவேற்றுக . மனமுவந்து மகிழ்ச்சியோடு தானம் செய்க.
இடமறிந்து தானம் செய்க. இல்லாதவர்க்கு தானம் செய்க.
புகழ் பாராது தானம் செய்க. புண்ணிய பலன் அனைத்தும் நீர் பெருக.
தானத்தின் மகிமைதனை தம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து கருத்துதனை உணர்ந்து செயல்படுவோம் .
Image source: dailythanthi.com