திருநெல்வேலி அருகே உள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற எட்டெழுத்து பெருமாள் திருக்கோவில். இந்த கோவிலின் கோசாலையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கோசாலையில் உள்ள சிவன் கோவிலில் புதிதாக ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஹரித்துவாரில் தயாரான சுமார் இரண்டு அடி உயரமுள்ள ஸ்படிக லிங்கம் தற்போது திருக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் கோவிலுக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் தான் சுமார் 2 அடி உயரமுள்ள ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சித்தர்கள் முறைப்படி வரும் பிப்ரவரி 11 அன்று இந்த ஸ்படிக லிங்கம் சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.