- தென் மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க் அவர்கள் திருநெல்வேலி வருகை.
- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு.
தமிழக காவல்துறை தென்மண்டல ஐ.ஜி. திரு.ஆஸ்ரா கார்க் அவர்கள் நேற்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து, அலுவலகத்தில் நடைபெறுகின்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சிறப்பாக கையாள வேண்டும் என்றும், திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், தனிப்பிரிவு போலீசார் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும், கிராம மக்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு திரு.ஆஸ்ரா கார்க் அவர்கள் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் திறந்து வைத்தார். இதில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com