Logo of Tirunelveli Today

தெற்கு விஜய நாராயணம் தர்கா கந்தூரி விழா

August 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

இந்து முஸ்லிம் மத நல் இணக்கத்திற்கு உதாரணமாக விளங்கும் தெற்கு விஜய நாராயணன் தர்கா கந்தூரி விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தெற்கு விஜய நாராயணபுரத்தில் மேத்தபிள்ளையப்பா தர்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தர்காவில் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த வருடமும் ஆடி மாதம் 16ஆம் தேதி கந்தூரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

தர்கா அமைந்துள்ள தெற்கு விஜய நாராயணத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட கிடையாது என்பது மிக பெரிய ஆச்சரியம் . வெளியூர்களிலிருந்து கந்தூரி விழாவிற்காக வரும் முஸ்லிம்களை, இந்து தேவர் சமுதாயத்தினர் தங்களுடைய வீடுகளில் வரவேற்று தங்க வைப்பார்கள். உபசரித்து அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றனர். அவர்களே கந்தூரி விழாவையும் முன் நின்று நடத்துகின்றனர் .

இந்த வருடம் அதிக ‌அளவில் முஸ்லிம்கள் கந்தூரி விழாவில் கலந்து கொண்டனர். காலையில் கொடி ஊர்வலமானது மேத்தபிள்ளையப்பா பிறந்ததாக சொல்லப்படும் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. திரளான முஸ்லிம்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர் . அதன் பின்பு தர்காவில் கொடியேற்றப்பட்டது . தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது‌ அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது . இந்த விழா முஸ்லிம் இந்து ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நல்லிணக்க விழாவாக அமைந்திருந்தது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify