Logo of Tirunelveli Today

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா

July 21, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 28ஆம் தேதி சிறப்பாக நடைபெற இருக்கிறது.
  • அதையொட்டி வருகிற 26 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் 120 சிறப்பு பஸ்கள் இயக்க பட உள்ளன.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ் பெற்ற திருத்தலமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் விளங்குகிறது.

இந்த வருடத்துக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28ஆம் தேதி வியாழக்கிழமையன்று சொரிமுத்து அய்யனார் கோவிலில் மிக சிறப்பாக நடக்க இருக்கிறது.

முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து சேரன்மாதேவி உதவி ஆட்சியர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது;

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது அதையொட்டி வருகிற 26 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் 120 சிறப்பு பஸ்கள் இயக்க பட உள்ளன.

காலை 6 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை அரசு பஸ்களில் மட்டும் செல்வதற்கு பக்தர்கள் அனுமதி உண்டு. பிளாஸ்டிக் பொருட்கள் , மது பாட்டில்கள் , புகையிலை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும்.தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 துணை போலிஸ் சூப்பரண்டுகள் 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 545 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வனத்துறை ஊழியர்கள் 250 பேர் தன்னார்வலர்களும் களக்காடு அம்பை, தூத்துக்குடி, கன்னியாகுமரி , வனக்கோட்டங்களில் இருந்து இணைந்து , வனப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள இருக்கின்றனர் .

தனியார் பேருந்துகள், பாபநாசம் செல்வதற்கு அனுமதி இல்லை .ஆடி அமாவாசை தினத்தன்று பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருபவர்கள் பழைய பாபநாசம் சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிளை விட்டு , பாபநாசத்திற்கு நடந்துதான் சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரிஷப் கூறினார்.

துணை போலீஸ் சூப்பிரண்ட் பிரான்சிஸ், தாசில்தாரர் ஆனந்த பிரகாஷ் , வனசரகர்கள் ஸ்டாலின் கருப்பையா , கிருத்திகா, கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா மற்றும் அதிகாரிகள் உதவி ஆட்சியர் உடன் இருந்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify