Logo of Tirunelveli Today

மின் கட்டண சுமை குறைக்க சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்

July 1, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்படும் மாநகராட்சி‌ கவுன்சிலர் கூட்டத்தில் மேயர் தகவல்.
  • கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் மேயர் சரவணன் கூறினார் .

நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் சரவணன் தலைமை தாங்க,
துணை மேயர் ராஜு ,ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் பிரான்சிஸ் கதீஜா, மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

நெல்லை மாநகராட்சியில் ஆண்டுக்கு மின் கட்டணம் ரூபாய் 14 கோடி செலுத்த வேண்டியுள்ள நிலையில் மாநகராட்சிக்கு அதிக நிதி சுமை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய முயற்சியாக நான்கு கோடி வரை மிச்சப்படுத்தும் வகையில் நெல்லை செட்டியார் பட்டியல் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.

இதன் மூலம் ஐந்து மெகா பாத் மின் உற்பத்தியை பெற முடியும். வருகிற மார்ச் மாதத்திற்குள் ஆமாநகராட்சிக்கும் ரூபாய் 150 கோடி வரி வசூல் செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்க…ஆனால் இதுவரை ரூபாய் 54 கோடி மட்டுமே வரி வசூல் ஆகியுள்ளது என்ற மாவட்ட மேயர் சரவணன் பேசுகையில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

11வது வார்டு கந்தன் வண்ணாரப்பேட்டையில் பழுதடைந்த நாகராஜ் மாநகராட்சி பள்ளி கட்டிடத்தை உடனே கட்டித் தர வேண்டும் என்று கூறினார்.

36 ஆவது வார்டு சின்னத்தாய் கூறுகையில் மாநகராட்சி கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்க வேண்டும் .இந்திரா நகர் காமராஜ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறைக்கு உரிய தீர்வு காண வேண்டும்

14வது வார்டு கீதா ,ஊருடையார் புறம் தச்சநல்லூர் சாலையை சீரமைக்கவும், மழை நீர் எளிதாக ரோட்டை கடந்து செல்லும் வகையில் ஓடை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைத்தார்.

முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3வது வார்டு சுப்பிரமணியனும் , தச்சநல்லூர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2வது வார்டு முத்துலட்சுமியும் கோரிக்கை வைத்தனர்.

6வது வார்டு பவுல்ராஜ் நெல்லை பாளையங்கோட்டை ஏஞ்சல் மருத்துவமனை அருகில் பழமை சின்னமாய் விளங்கும் மணிக்கூண்டை சீர்படுத்தி புதுப்பித்து, டிஜிட்டல் கடிகாரம் அலங்காரம் மற்றும் பொது விளக்குகள் அமைக்கவும். மழைநீர், பாதாள சாக்கடை கழிவு நீர் குடியிருப்புகளுக்கு செல்லாமல் இருக்க புதிய சாலை அமைக்கவும் வேண்டும் என்று 6வது வார்டு பவுல்ராஜ் கூறினார்.

காலி குடத்துடன் வந்த காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா புதுப்பேட்டை தெரு, பாளையங்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் குடிநீர் வசதி மற்றும் சாக்கடைதூர் வாருதல், ரோடு சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல் கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify