செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவியில் அரசு பள்ளியில் முன்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெய்னா முகம்மது கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி பள்ளி முன்பிருந்து தொடங்கியது.
பேரணியை சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷாப் கொடியசைத்து தொடங்கி வைக்க , பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணி பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது
இந்த பேரணியை சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ் பெர்னான்டோ ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெய்னா முகம்மது கலந்த கொண்ட இந்த பேரணியில் ஆசிரியர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.