செய்திக்குறிப்புகள்:
- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே வாரிய பயணிகள் தேவை குழுவினர் ஆய்வு செய்தனர்.
- குழுவின் தலைவர் சிவராஜ் கன்ஜி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சிவராஜ் கன்ஜி தலைமையில் இந்தியா ரயில்வே வாரிய பயணிகள் குழு உறுப்பினர்கள் பொன்.வி. பாலகணபதி , எட்டமனுர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்
ரயில் பயணிகளின் வசதிகள் சரியாக கண்காணிக்கப்படும் வகையில் குடிநீர் கழிப்பறை , மின்சார வசதி முறையாக உள்ளதா! என்று கேட்டு அறிந்தனர்.
நடை மேடைகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்த ஆய்வு குழுவினர் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டனர். கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு பயணிகளுக்கு உரிய ரசீது வழங்கப்படுகின்றதா என்றும் , விற்கப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை முறையாக குறிப்பிட சொல்லியும் ஆய்வு நடத்தும் போது அறிவுறுத்தப்பட்டது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முருகேசன், மதுரை கோட்ட வர்த்தக மேலாளர் வெங்கட சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.
Image source: dailythanthi.com