நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் சிவனாரின் பஞ்ச சபைகளில் தாமிர சபை திருத்தலம் என்று புகழ்பெற்று அழைக்கப்படும் திருத்தலமாகும்.
பல அவதாரங்களில் காட்சி தந்த மகாவிஷ்ணு , அக்னி பகவான் அகஸ்தியர் வாம தேவ ரிஷி, மனப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடன காட்சி கொடுத்த அருமையான திருத்தலம்.
நெல்லை மாவட்டம் அந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ராஜவல்லிபுரம் செப்பனை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது .
வருடந்தோறும் ஆனி தேர் திருவிழா மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் ஆனித் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க…விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் .
கோவிலின் விழா நாட்களில் காலை மாலை இரு வேளையும் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. பாராயணங்களும் படிக்கப்பட்டது.
உருகு சட்ட சேவையை கடந்து தொடர்ந்து அழகிய கூத்தர் சபையிலிருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளிய அற்புதமான நிகழ்வும் 2 ஆம்தேதி நடைபெற்றது.
காலையில் வெள்ளை சாந்தி தரிசனம் மாலையில் பச்சை சாந்தி தரிசனம் என நேற்று முன் தினம் நடைபெற்று விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
பகல் 11:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற அனைத்து பக்தர்களும் வந்திருந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் .
இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு தீபாராதனை ,மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா என பக்தி பிரவாகமான ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறும்.
தொடர்ந்து அழகிய கூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற அதை தரிசனம் காணும் பக்தர்கள் புண்ணியம் பெற்று வாழ்க்கைப் பயனை நிறைவு செய்யுங்கள்.
Image source: dailythanthi.com