- விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு.
- பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 23/03/2022 அன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள், மாணவிகள் விளையாட்டுகளில் சாதனை புரிய அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கிட, சத்தான உணவுகள் மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பயிற்சி பள்ளிகள் அரசு சார்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மாணவிகளுக்கான செயல்பட்டு வருகிறது.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாணவ - மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெறுவதற்கான தேர்வு வரும் 23/03/2022 ஆம் தேதியன்று காலை 8.00 மணிக்கு துவங்கி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 0462-2572632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Image source: Facebook.com