- அரசு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.
- இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் உருவாக்கிய அறிவியல் ரீதியிலான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த அறிவியல் கண்காட்சியில் தாவரங்கள் வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம், காற்றாலை மாதிரி, மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள், பூமி அதிர்வை முன்கூட்டியே அறிவுறுத்தும் கருவி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை அறிஞர் அண்ணா தொடக்கப்பள்ளி மற்றும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.
Image source: maalaimalar.com