தமிழக அரசு 01/02/2022 முதல் பள்ளிகளை திறக்க அனுமதியளித்ததை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 1,534 பள்ளிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. காலை 9.00 மணிக்கு வழக்கம் போல திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாணவ - மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்ததால் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசி அளவலாவினார்கள். ஆசிரியர்களும் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளித்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் நேற்று காலை மற்றும் மாலை வேளையில் பேருந்துகளில் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.