செய்தி சுருக்கம்
- நெல்லை சேரன்மாதேவி பேரவை ஐம்பத்தி ஒன்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது
- ஆண்டுவிழாவில் தமிழ் பேரவை தலைவர் செந்தில் நாயகம் தலைமை ஏற்று உரையாற்றினார்
விழுந்து எழும் மழலை இனிதாக துவண்டு விழும் உடல் எழுந்தாக, கவலை கொண்ட முகம் சிரிப்பாக குழப்பம் கொண்ட மனம் தெளிவாக ஆவதற்கு தேனினும் இனிய தமிழ்மொழியில் பேசினால் போதும் புத்துணர்ச்சி தானாக பிறக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக..
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஸ்காட் கலை அரங்கில் 2 நாட்கள் சேரன்மாதேவி தமிழ் பேரவை 59 வது ஆண்டு விழா நடந்தது. தமிழ் பேரவை தலைவர் செந்தில் நாயகம் தலைமை தாங்க பேரூராட்சி தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.
தமிழ் பேரவை துணைத் தலைவர் ராமன் வரவேற்பு உரையாற்ற, தாசில்தார் பாலசுப்பிரமணியன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை பேசினர். செல்லப்பா குழுவினரின் தேவார பண்ணிசையும், சங்கர சரஸ்வதி வித்யாலயா குழுவினரின் குரலிசை மற்றும் நாதலய நாட்டியமும் நடைபெற்றது .
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல்களில் பெரிதும் விஞ்சி நிற்பது சமய உணர்வா! சமுதாய உணர்வு? என்ற தலைப்பில் பட்டிமன்றம் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு பார்க்க மிக சிறப்பாக நடைபெற்றது .
கமிட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் நன்றி கூறினார் . இரண்டாவது நாள் நடந்த விழாவிற்கு தமிழ் பேரவை தலைவர் துரைசாமி தலைமை தாங்க பொருளாளர் பொன்னழகன் வரவேற்றுப் பேசினார் . இசக்கி சுப்பையா எம்எல்ஏ உதவிப் பேராசிரியர் ஆகியோர் வாழ்த்தி பேசினர் .
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் 'என பாடினார் பாரதியார். அவருடைய கவிதை வரிகள் அனைத்தும் மக்களுக்கு எழுச்சியூட்டும் விழிப்புணர்வு கொண்ட பாடலாக அமைந்தது. அப்படிப்பட்ட தமிழுக்கு தொண்டாற்றிய பாரதியாரின் பாடல்கள்
வெங்கடேஸ்வரன் குழுவினரின் இசையில் மிக அருமையாக பாடினர்.
தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற தமிழ் பேரவையின் மதிப்பு தலைவர் செந்தில் நாயகத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது .தமிழ் பேரவை துணை செயலாளர் சாய்ராம் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.