செய்திக் குறிப்புகள் :
- நெல்லை களக்காடு ஸ்ரீ கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா
- வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
ஸ்ரீ கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
கொலு மண்டபத்திற்கு சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு மிக அழகாய் காட்சி தருகின்றாள். கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது .
பத்து நாட்கள் நடைபெறும் இந்த தெய்வீக விழாவில் தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வர…. திரளான பக்தர்களுக்கு காணக் கிடைக்காத அற்புததரிசனம் ஆக அமையும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
திருவிழா குறித்த விவரங்கள்;
8ஆம் நாள் 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளல்
9 ஆம் திருநாள் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்
10ஆம் திருநாள் 12 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி
ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.