சர்வ அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் .
புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ராமநாத ஸ்வாமி கோவிலில் புனித நீராடி தெய்வத்தை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆனி மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இன்று புனித நீராட அதிக அளவிலான பக்தர்கள் வருகை புரிந்து இருந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர் அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று நீராடி தெய்வத்தை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
Image source: Dailythanthi