பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோமதி அம்மை உடனுறை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி திரிபுராந்தீஸ்வரர், பிரதோஷநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் சிறிய இடப வாகனத்தில் எழுந்தருளி பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிதர இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.